Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!” - மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் உறுதி!

11:01 AM Jun 17, 2024 IST | Web Editor
Advertisement

‘‘மத்தியில் வலுவான கூட்டணி அரசு இருப்பதால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்’’என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறி உள்ளார்.

Advertisement

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நேற்று பங்கேற்றார்.

அப்போது அர்ஜூன் ராம் மேக்வால் பேசியதாவது:

பாஜ தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை பற்றி குறிப்பிட்டுள்ளோம். கோவா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இச்சட்டத்தை செயல்படுத்த தொடங்கி உள்ளன.

மத்தியில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளதால் கவலைப்பட ஒன்றுமில்லை. வாக்குறுதிப்படி பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவோம். தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். எந்த ஒரு தேர்தல் முடிந்த பிறகும் எந்த வன்முறையும் இருக்கக் கூடாது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :
approvalArjun Ram MeghwalBILLUCCUniform Civil Code
Advertisement
Next Article