For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஸா போர் 100-வது நாள்: இஸ்ரேலிய பிணையக் கைதிகளை விடுவிக்க கோரி டெல்அவிவ் நகரில் பேரணி!

11:19 AM Jan 15, 2024 IST | Web Editor
காஸா போர் 100 வது நாள்  இஸ்ரேலிய பிணையக் கைதிகளை விடுவிக்க கோரி டெல்அவிவ் நகரில் பேரணி
Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் தொடங்கி 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, பிணையக்கைதிகளை விடுவிக்க கோரி  இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேரணி நடத்தினர்.

Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 100 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.  இதனால், லட்சக்கணக்கான மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர்.  இப்போரில் 25000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.  மேலும் காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து நடத்திய வான்வெளி தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

காஸாவில் வசித்து வரும் 11 லட்சம் குழந்தைகளில் 10,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியானதால், மொத்த குழந்தை மக்கள் தொகையில் 1% பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,968-ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், காஸாவுக்கும் இடையே போர் தொடங்கி 100 நாட்கள் தாண்டிய நிலையில், 100 வது நாள் நிறைவையொட்டி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பினரால் அக். 7ஆம் தேதி பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது, 100 நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என வேதனை தெரிவித்தனர். இதில் பலர் பழிவாங்குவது வெற்றியல்ல எனவும், ஆக்கிரமிப்பு வேண்டாம் எனவும் பல கோஷங்கள் கொண்ட பலகைகளை ஏந்தி வந்தனர்.

பயணக்கைதிகளை காஸா விடிவிக்கும் வரையில் வாரந்தோறும் வருவோம் எனவும் பலர் கூறினர். மேலும் பயணக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Advertisement