For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"காசாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம்" - ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!

04:20 PM Dec 26, 2023 IST | Web Editor
 காசாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம்    ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
Advertisement

பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால் காசா, பாலஸ்தீனத்தின் நிலை இந்தியாவிற்கும் ஏற்பட இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

Advertisement

தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பியும்,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

"இந்திய நாடு தனது அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்தினால் தான், இரு நாடுகளும் வளர்ச்சியடைய முடியும்.  இந்தியாவால் தன் நண்பர்களை மாற்றிக் கொள்ள இயலும்,  ஆனால் அண்டை நாடுகளை மாற்றிக் கொள்ள இயலாது என முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்ப்பாய் கூறியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடியும் கூட போர் என்பது தீர்வல்ல எனவும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றியடைய வாய்ப்புள்ளது.  அவர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்புகிறார்.  இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் காசா,  பாலஸ்தீனத்தின் நிலையே இந்தியாவிற்கும் ஏற்படலாம்"

இவ்வாறு ஃபரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

Tags :
Advertisement