For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐதராபாத்தில் நாய் உரிமையாளரை தாக்கிய கும்பல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

01:01 PM May 16, 2024 IST | Web Editor
ஐதராபாத்தில் நாய் உரிமையாளரை தாக்கிய கும்பல்  இணையத்தில் வைரலாகும் வீடியோ
Advertisement

ஐதராபாத்தில் வளர்ப்பு நாய் உரிமையாளர்,  நடுவீதியில் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

அண்மையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் தெருநாய்,  வளர்ப்பு நாய்கள்  கடிப்பது அதிகரித்து வருகிறது.  சமீபத்தில் சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை,  2 வளர்ப்பு நாய்கள் கடித்த நிலையில்,  சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதையடுத்து நாயின் உரிமையாளர்,  மனைவி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதுபோல நாய் கடிப்பது ஆங்காங்கே நடந்து வருகிறது.

இந்நிலையில்,  தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் வளர்ப்பு நாய் உரிமையாளர், நடுவீதியில் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஐதராபாத் அருகே மதுரா நகரில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வெளிநாட்டு ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.  இந்த நாய், அடிக்கடி எதிர் வீட்டுக்கு நுழைவதும்,  சிறுநீர், ம லம் கழிப்பதும் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது.  இது தொடர்பாக எதிர்வீட்டில் இருப்பவர்கள் நாயை வீட்டில் கட்டி வைக்கும்படி கூறியுள்ளார்.

தொடர்ந்து நாய் எதிர்வீட்டுக்கு வந்துள்ளது.  இதனால், ஆத்திரமடைந்த எதிர் வீட்டில் வசித்து வருபவர்  தன்னுடைய நண்பர்களை அழைத்து வந்து ஸ்ரீநாத்திடம் தகராறில் ஈடுபட்டார்.  மரக்கட்டைகளை எடுத்து ஸ்ரீநாத்தை சரமாரியாக தாக்கினர்.  மேலும், அவரது வளர்ப்பு நாயையும் அடித்து விட்டுச் சென்றனர்.  இதையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர்,  காயமடைந்த ஸ்ரீநாத் மற்றும் நாயை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை! – அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதுகுறித்து மதுராநநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
Advertisement