காந்தியின் சொற்களே நம்மை வழிநடத்துகிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்...!
"காந்திப் பெருமகனாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக" நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது பேத்திகளுடன் டெல்லியில் உள்ள பிர்லா பவனில் ஒரு மாலை பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்தார்.
மாலை 5:17 மணியளவில், இந்து தேசியவாதியான நாதுராம் கோட்சே என்பவர் மகாத்மா காந்தியை சுட்டார். மூன்று தோட்டாக்கள் மகாத்மாவின் மார்பை துளைத்தன. சம்பவ இடத்திலேயே மகாத்மா இறந்தார்.
இந்நிலையில்,மகாத்மா காந்தி என மக்களால் அழைக்கப்படும் மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் 76வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள் பலரும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, "காந்திப் பெருமகனாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக" நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இட்ர்ஹு குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக” என அவர் தெரிவித்துள்ளார்.