காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி!
மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்தியா சுதந்திரம் பெற அகிம்சை வழியை பின்பற்றியவர் காந்தி. மேலும் இந்தியா சுதந்திரம் பெற முக்கிய பங்காற்றியவர். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினமான இன்று இந்தியா முழுவதும் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி அவர் எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
இந்த புண்ணிய திதியில் மகாத்மாவுக்கு நான் அஞ்சலி செலுத்தினேன். மகாத்மா காந்தியின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்ய நம்மை ஊக்குவிக்கின்றன.
நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்திற்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
I pay homage to Pujya Bapu on his Punya Tithi. I also pay homage to all those who have been martyred for our nation. Their sacrifices inspire us to serve the people and fulfil their vision for our nation.
— Narendra Modi (@narendramodi) January 30, 2024