கேலோ இந்திய விளையாட்டு போட்டி.. வெற்றிக் கோப்பையுடன் திரும்பிய மாற்று திறனாளி வீரர்!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஓட்டபந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய மாற்று திறனாளி மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிளேடு ஓட்டப்பந்தய வீரரான கே.ராஜேஷ் 200 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் நீளம் தாண்டுதலில் 4-வது இடத்தை பிடித்தார். ராஜேஷ் சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் 3 ஆண்டு பொறியியல் பயின்று வருகிறார். 10 மாத குழந்தையாக இருக்கும் போது ராஜேஷ் தனது காலை இழந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஒற்றுமை நடைப்பயணம் 2.0 | ராகுல் காந்தியுடன் இணையும் பிரியங்கா காந்தி?...
குழந்தை பருவத்திலேயே காலை இழந்தாலும் ராஜேஷ் நம்பிக்கையை இழக்கவில்லை. செயற்கை காலுடன் தொடர்ந்து பாரா விளையாட்டு பங்கேற்று வந்தநிலையில் கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்து சென்னை திரும்பிய விளையாட்டு வீரருக்கு விமான நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி செயலாளர் முனைவர் தேவ் ஆனந்த் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தடகளவீரர் ராஜேஷ், "ஒலிம்பிக் போட்டியில் கலந்துப்கொண்டு தங்கம் வெல்வதே தனது எதிர்காலம் திட்டம் " என தெரிவித்தார்.