Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கஜா புயல்: இழப்பீடு பெற விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் - உயர் நீதிமன்றம் உத்தரவு !

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
01:45 PM Feb 11, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதில் நான்கு கடலோர மாவட்டங்களை முற்றிலும் சூறையாடியது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களை சந்தித்தனர்.

Advertisement

கஜா புயலின் போது 63 பேர் உயிரிழந்தனர். 732 கால்நடைகளும் உயிரிழந்தது. மேலும் 88 ஆயிரம் ஹெக்டர் பரப்பு நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. அதேபோல், 56 ஆயிரத்து 942 குடிசை வீடுகள் மற்றும் 30ஆயிரத்து 322 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.

இதையடுத்து கஜா புயலால் இடிந்த வீடுகள், பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், தென்னை மரங்கள், கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கலைச்செல்வன், வெள்ளைச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளதாகவும், இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால் அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசு தான் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும். அரசு நியாயமான இழப்பீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags :
ApplicationsCompensationFloodgaja cyclonegovernmentHeavyRainHigh courtOrdersRainTamilNadu
Advertisement
Next Article