தஞ்சாவூர் முதல் புதுக்கோட்டை வரை... 13 மாவட்டங்களில் இன்று வெளுக்க போகும் மழை... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 22ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில், இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..” – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு – சசிகுமார் நெகிழ்ச்சி!
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் அறிவுறுத்ப்பட்டுள்ளது.