For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'விவசாயிகளுக்கு மாதம் ரூ.2000 முதல் அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி வரை' - புதுச்சேரி பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்புகள்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (மார்ச்.12) தாக்கல் செய்தார்.
11:12 AM Mar 12, 2025 IST | Web Editor
 விவசாயிகளுக்கு மாதம் ரூ 2000 முதல் அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி வரை    புதுச்சேரி பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்புகள்
Advertisement

புதுச்சேரி சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5வது பிரிவுக் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னர் அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து,  புதுச்சேரி சட்டப்பேரவை 15வது பட்ஜெட் கூட்டத்தொடரின் 6வது பிரிவுக் கூட்டம், துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.

Advertisement

அப்போது காகிதமில்லா பட்ஜெட் கூட்டமாக நடைபெற்ற நிலையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சுமார் 55 நிமிடங்கள் உரையை வாசித்தார். பின்னர் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று (மார்ச்.11) நடைபெற்றது. இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (மார்ச்.12) தாக்கல் செய்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து வேலைநாள்களுக்கும் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

பட்ஜெட் அறிவிப்புகள்: 

  • அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ரூ.2000 வழங்கப்படும்.
  • அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வரும் நிதியாண்டு முதல் இலவச அரியுடன் 2 கிலோ கோதுமையும் இலவசமாக வழங்கப்படும்.
  • மதிய உணவு திட்டத்தில் வார இருமுறை வழங்கப்படும் சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும்.
  • 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
Advertisement