For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை" - நடிகர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக மாறியது குறித்த ஆவணப்படம் அக்கட்சியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.
12:20 PM Feb 26, 2025 IST | Web Editor
 ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை    நடிகர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு
Advertisement

நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில், அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

Advertisement

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி கடந்த பிப்.2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இவ்விழாவினையொட்டி விழா மேடைக்கு வந்த விஜய்க்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து,‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்ட திணிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராடி #GetOut செய்திட உறுதியேற்போம்!’ என தவெக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கட்சியின் தலைவர் விஜய் முதல் கையெழுத்திட்டார்.

இதனை தொடர்ந்து நடிகராக இருந்து அரசியல் கட்சி தலைவராக மாறிய நடிகர் விஜய்யின் பரிணாம ஆவணப் படத்தை விழாவில் வெளியிட்டனர். விஜய் ரசிகர் மன்றத்தில் தொடங்கி திரைத்துறையில் அரசியல் ரீதியாக விஜய் சந்தித்த பிரச்சனைகள், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு, மக்கள் நலத்திட்ட பணிகள், நீட் எதிர்ப்பு உள்ளடங்கிய காட்சிகளை ஆவணப் படமாக உருவாக்கியுள்ளனர். இந்த ஆவணப் படத்தின் காட்சிகளை பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கியுள்ளார். இவ்விழாவில் ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் மற்றும் தவெக நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement