இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் - ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு.!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா வந்தடைந்தார். அவருக்கு ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரான் நாளை நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று இமானுவே மேக்ரான் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்.
பிரான்ஸில் இருந்து நேரடியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்த அவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஆகியோர் வரவேற்றனர். இதன் பின்னர் மேக்ரானுக்கு ராஜஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை பார்வையிட்டார்.
இதன் ஒருபகுதியாக் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் கோட்டைக்கு சென்ற இமானுவேல் மேக்ரான் அதனை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்வையும் பார்த்து ரசித்தார். அதன் பின்னர் அங்கிருந்த மாணவர்களிடம் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நாளை டெல்லியின் ஜந்தர் மந்தரில் இருந்து ஹவா மஹால் சங்கானேரி வாசல் வரை மோடி மற்றும் மேக்ரான் பேரணி நடத்த உள்ளனர். ராம்பேக் அரண்மனையில் மேக்ரானுக்கு இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.