காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் - அஜய் மக்கான் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்கள் வர உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே தங்களது கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலமாக ஜனநாயகமும் முடக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதேபோல பொதுமக்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.