Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்" - பிரதமருக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
03:43 PM Jul 25, 2025 IST | Web Editor
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய அரசு முறை பயணத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

Advertisement

சுமார் 99% வரிப்பிரிவுகளில் (tariff lines) வரி நீக்கம் செய்ததோடு, இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், விமான பாகங்கள் ஆகியவற்றை மிகவும் மலிவான விலையில் பெற வழிவகுத்துள்ளது. முதலீட்டை மேம்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் உந்துதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளி, கடல் சார்ந்த உணவு வகைகள், காலணிகள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பயனளிக்கும். அதிலும் குறிப்பாக, காஞ்சிபுரம் புடவைகள், திருப்பூர் பின்னலாடைகள், ஈரோடு மஞ்சள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், வேலூர் காலணிகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையிலேயே இருந்த வர்த்தக ஒப்பந்தத்தைத் தற்போது தனது பயணத்தால் சாத்தியமாக்கி பாரதத்தின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ள நமது நாட்டின் வளர்ச்சி நாயகன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BJPENGLANDFree trade agreementIndiamodinainar nagendranprime ministertarifflinesTrade
Advertisement
Next Article