இலவச மனைப்பட்டா - கையில் எலிகளுடன் பட்டியலின மக்கள் நூதன போராட்டம்!
புதுச்சேரியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இருளர் மற்றும் பழங்குடி இன மக்கள், தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க கோரி, எலிகளை கையில் பிடித்துகொண்டு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில், கடந்த 50
ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் மற்றும் பழங்குடி இன மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க அரசை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க கோரி, கைகளில் எலிகளை பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து இலவச மனை பட்டா வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.