For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு பணி மறுப்பு? அறிக்கை கேட்கும் மத்திய அரசு! 

09:56 PM Jun 26, 2024 IST | Web Editor
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு பணி மறுப்பு  அறிக்கை கேட்கும் மத்திய அரசு  
Advertisement

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என புகார் எழுந்த நிலையில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையை மத்திய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இந்த செய்திகளின் பின்னணியில்,  விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் மத்திய அமைச்சகம் கோரியுள்ளது.

ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, பாகுபாடு காட்டக்கூடாது என 1976-ம் ஆண்டின் சமவேலைக்கு சமஊதியம் சட்டத்தின் பிரிவு-5 தெளிவாக தெரிவிக்கிறது.  இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு என்பதால், அதனிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அதே சமயம், உண்மை நிலை அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு அளிக்குமாறு பிராந்திய தலைமை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்துக்கும் பணிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement