For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அறக்கட்டளை பணமோசடி விவகாரம் | சினேகன் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

09:24 PM Feb 06, 2024 IST | Web Editor
அறக்கட்டளை பணமோசடி விவகாரம்   சினேகன் மீதான வழக்கு ரத்து   சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement

பாஜக நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரில் பாடலாசிரியர் சினேகன் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பாடலாசிரியர் சினேகன் நடத்தி வரும் "சினேகம் அறக்கட்டளை" பெயரை கூறி பாஜக நிர்வாகியும்,  நடிகையுமான ஜெயலட்சுமி பொதுமக்களிடம் பணம் வசூலித்து  மோசடி செய்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியாக கூறி, சினேகன் மீது ஜெயலட்சுமி புகாரளித்தார். இதனடிப்படையில் சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்: சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம் – கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!

பின்னர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு  விசாரணைக்கு வந்தது.  சினேகன் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆஜராகி,  "சினேகம் பவுண்டேஷன்" என்ற பெயரை ஜெயலட்சுமி தான் தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்.

சினேகன் மீது பொய்யாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.  இந்த நிலையில் சினேகன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement