Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அறக்கட்டளை பணமோசடி வழக்கு - நடிகை ஜெயலட்சுமி கைது!

03:11 PM Feb 20, 2024 IST | Web Editor
Advertisement

 “சினேகம் அறக்கட்டளை”  பணமோசடி வழக்கில் நடிகை விஜயலட்சுமியை சென்னை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

பாடலாசிரியர் சினேகன் நடத்தி வரும் “சினேகம் அறக்கட்டளை” பெயரை கூறி பாஜக நிர்வாகியும்,  நடிகையுமான ஜெயலட்சுமி பொதுமக்களிடம் பணம் வசூலித்து  மோசடி செய்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியாக கூறி,  சினேகன் மீது ஜெயலட்சுமி புகாரளித்தார். இதனடிப்படையில் சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து விசாரணையில் சினேகன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றனம் ரத்து செய்தது.  இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் , வழக்கு தொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

மூன்று மணிநேர சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்கள் ஜெயலட்சுமி  இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து நடிகை விஜயலெட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.  நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags :
enquiryJayalakshmiPoliceSneganSnegan Foundation
Advertisement
Next Article