For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ; இந்திய அணி அறிவிப்பு...!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
06:30 PM Nov 23, 2025 IST | Web Editor
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்   இந்திய அணி அறிவிப்பு
Advertisement

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடுகிறன.

Advertisement

முதலில் இரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வர்கிறது.  டெஸ்ட் தொடரையடுத்து  ஒருநாள் போட்டிகள் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கழுத்து வலி காரணமாக இந்திய கேப்டன் சுப்மன் கில், தொடரில் இருந்து விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பு கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:

ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்), ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரேல்.

Tags :
Advertisement