இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது!
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க "அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் இலங்கை குற்றபுலனாய்வு காவலர்களால் கைது செய்யபப்ட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு விக்ரமசிங்க, பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான முனைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்றுள்ளார். இந்த பயணத்துக்கான செலவுகளில் அரசு நிதியை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் விக்கிரமசிங்க தனது பயணத்திற்கான செலவுகளை தானே ஏற்றுக்கொண்டதாகவும், எந்த அரசு நிதியும் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்
ஆனால் குற்றபுலனாய்வு துறையானது விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட பயணத்திற்காக அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வழக்கில் சம்மன் வழங்கிய நிலையில், ரணில் விக்ரமசிங்க கொழும்புவில் உள்ள குற்றப்புலனாய்வு அதிகாரிகள் முன்பு இன்று ஆஜரானார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமானது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.