For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை!

01:14 PM Dec 25, 2023 IST | Web Editor
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்  தலைவர்கள் மரியாதை
Advertisement

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை செலுத்தினர்.

Advertisement

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 99-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.   இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,  பிரதமர் மோடிஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் டிச. 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

அடல்பிகாரி வாஜ்பாய் 

1924-ல் மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், பள்ளிக்கல்வியை குவாலியரில் முடித்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

1951-ல் ஜன சங்கத்தில் சேர்ந்த வாஜ்பாய் ஷியாம் பிரகாஷ் முகர்ஜியின் தொண்டரானார். 1968-ம் ஆண்டு ஜனசங்கத்தின் தேசிய தலைவரானார். 1957 முதல் 50 வரும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய இவர், மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்கள் அவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜன சங்கம் பின்னாளில் பாரத ஜனதா கட்சியாக உருவெடுத்தது.  இதனை அத்வானி, முரளி மனோகர் ஜோஷியுடன் வாஜ்பாய் இணைந்த தொடங்கி அதன் தலைவராக அக்கட்சியை வழிநடத்தினார். 1996-ல் பாஜக ஆட்சி அமைத்த போது 16 நாட்கள் பிரதமராக இருந்தார். பின்னர் பெரும்பான்மை கிடைக்காததால் ராஜினிமா செய்தார். தொடர்ந்து 1998 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற பின் மீண்டும் பிரதமரானார்.

1998-ம் ஆண்டு அணுகுண்டு சோதனையை வெற்றிக்கரமாக நடத்தி உலக வல்லரசு நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த பின் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். 2018-ம் ஆண்டு தனது 93-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Tags :
Advertisement