முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை!
அதிமுகவின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இருக்கிறார். தற்போது ஒரத்தநாடு எம்எல்ஏவாகவும் உள்ளார்.
இந்நிலையில் 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க, லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த அப்பார்ட்மென்ட் கட்டுவத
ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்த பிறகு, அமைச்சர் ஒப்புதல் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் இரண்டு பேர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது.ற்கு 28 கோடி ரூபாய் வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து வைத்திலிங்கம் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்ற நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணிபரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது குறித்து அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ED, Chennai Zonal Office has provisionally attached two immovable properties worth Rs. 100.92 Crore (approx.) on 9/01/2025 under the provisions of the PMLA, 2002 in connection with the case against R. Vaithilingam, MLA, former Minister for Housing and Urban Development, Tamil…
— ED (@dir_ed) January 15, 2025