For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

06:35 AM Apr 16, 2024 IST | Web Editor
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்
Advertisement

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணித் தலைவருமான இந்திரகுமாரி காலமானார்.

Advertisement

கடந்த 1991 முதல் 1996 வரையிலான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திரகுமாரி பணியாற்றினார். இந்திரகுமாரி 2006-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த இவருக்கு இலக்கிய அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இவர் தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாக விளங்கினார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரகுமாரி நேற்று (ஏப்.15) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்திக் குறிப்பில்,

“திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திமுக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement