மறைந்த பின்பும் முஷாரஃபுக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டணை- பாக். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷாரஃப் அறிவித்தார். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவர் நிறுத்திவைத்தார். இது தொடர்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
ஆனால், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, லாகூர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது.
இதையும் படியுங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!
இந்த நிலையில் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. துபையில் நாடு கடந்து வசித்து வந்த முஷாரஃப் (79), உடல்நலக் குறைவு காரணமாக 2023 பிப்ரவரி 5-ல் காலமானார்.