Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உயிருக்கு ஆபத்து என கூறிய கர்நாடக முன்னாள் டிஜிபி: வீட்டில் சடலமாக மீட்பு... அதிர்ச்சியில் காவல்துறை!

கர்நாடகா டிஜிபி ஓம் பிரகாஷின் உடல் காயங்களுடன் மீட்பு...
08:44 PM Apr 20, 2025 IST | Web Editor
Advertisement

கர்நாடக முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஓம் பிரகாஷ் பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

அவரின் உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரகாஷின் மனைவி பல்லவி, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஓம் பிரகாஷின் உடலை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக போலீசார் உடலை அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னரே ஓம் பிரகாஷ் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

Tags :
Former Karnataka DGPOm PrakashPolice
Advertisement
Next Article