Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹரியானா முன்னாள் தலைவர்கள்!

12:42 PM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியானா முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிரண் சௌத்ரி மற்றும் அவரது மகள் ஸ்ருதி சௌத்ரி பாஜகவில் இணைந்தனர்.

Advertisement

ஹரியானா முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிரண் சௌத்ரி மற்றும் அவரது மகள் ஸ்ருதி சௌத்ரி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.  கிரண் சௌத்ரி மற்றும் ஸ்ருதி சௌத்ரி இருவரும் நேற்று ( ஜூன் 18ம் தேதி)  காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

கிரண் சௌத்ரி ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பன்சிலாலின் மருமகள் ஆவார். பிவானி மாவட்டத்தில் உள்ள தௌஷம் தொகுதியின் எம்எல்ஏவாகவும்,  ஹரியானா காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவராகவும் இருந்தார்.

இதையும் படியுங்கள் :காலி பாட்டிலை டெலிவரி செய்த ஸ்விக்கி நிறுவனம்! – வைரலாகும் வாடிக்கையாளரின் பதிவு!

பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்,  கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக்,  ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.

ஹரியானா முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கிரண் சௌத்ரி மற்றும் அவரது மகள் ஸ்ருதி சௌத்ரி ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
BJPCongressFormer Haryana Congress leadersKiran ChoudharyShruti Choudhary
Advertisement
Next Article