For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேற்கு வங்கம் | பணமோசடி விவகாரம் - #parthachatterjee ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

01:06 PM Oct 01, 2024 IST | Web Editor
மேற்கு வங்கம்   பணமோசடி விவகாரம்    parthachatterjee ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Advertisement

மேற்கு வங்க மாநிலத்தில் கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஜாமீன் கேட்ட வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு பள்ளிகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பான ஊழல் வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி மீதான ஊழல் மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க தடையில்லை என்று கடந்த ஆண்டு மே.26ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அதேபோல் அமலாகக்கத்துறை சம்மனுக்கு எதிராக அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த 9ம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பாக இருவரும் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : Tamirabarani -ல் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

இந்நிலையில், இந்த வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்தா சாட்டர்ஜி சிறையில் இருந்து வருகிறார். எனவே அவரது வயது முதிர்வை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags :
Advertisement