Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சிலை எரிப்பு - போலீசார் குவிப்பு!

05:30 PM Jun 30, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு  தீ வைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (ஜூன் 29) தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி கிருஷ்ணா தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இதனை தெலுங்கு தேசம் கட்சியினர்தான் செய்திருப்பர் என ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.மேலும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்த ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஆந்திரா முழுவதும் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஒய்எஸ்.ராஜசேகர ரெட்டி ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஆவார். கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த ஜெகன் அவரது தந்தையின் சிலைகளை ஆங்காங்கே நிறுவியது குறிப்பிடதக்கது.

Tags :
Andhra PradeshJagan Mohan ReddyPoliceTelugu Desam PartyYS Rajasekhara ReddyYSRCP
Advertisement
Next Article