திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி.மைத்ரேயன் !
புற்றுநோய் சிகிச்சை மருத்துவரான மைத்ரேயன் 1991ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 1995 முதல் 1997 வரை அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்துள்ளார். இதையடுத்து கடந்த 1999 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த மைத்ரேயன், 3 முறை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மைத்ரேயன், 2023ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து 2024ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மைத்ரேயன் தற்போது திமுகவிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி சட்டையின், அமைச்சர்கள் பலர் உடன் இருந்துள்ளனர்.பின்னர் மைத்ரேயனுக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதலமைச்சர் வழங்கினார்.