For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அதிமுக பிரமுகர் பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமின்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
09:09 PM Jan 30, 2025 IST | Web Editor
பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அதிமுக பிரமுகர் பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமின்
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், அதிமுக எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் பொன்னம்பலம் (60) மணிமங்கலம் காவல்துறையால் கைது  செய்யப்பட்டார். அவர் மீது, பெண் வன்கொடுமை, ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உள்பட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொன்னம்பலத்தின் வழக்கை விசாரித்த நீதிபதி வினோ, குற்றவாளிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார். வயது மூப்பு காரணமாகவும், பொன்னம்பலத்திற்கு சக்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளட்ட நோய் பாதிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டி, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பு வாதத்தை முன்வைத்த நிலையில், நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement