"துப்பாக்கி முனையில் கடத்தி நடத்தப்பட்ட கட்டாயத் திருமணம்" | அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்கள் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க பாஜக பல முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. குறிப்பாக கூட்டணியில் இருந்து விலகி சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக முயற்சித்து வந்தது.
மேலும் பேசிய அவர், 1998ஆம் ஆண்டு முதல் அதிமுக, பாஜக கூட்டணி தொடங்கியது. ஒரு காலத்தில் பாஜக அதிமுக கூட்டணி 31 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. எனவே வருகின்ற தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக, பாஜக இணைந்துதான் ஆட்சி அமைய உள்ளது. தமிழ்நாட்டில். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமையப் போக உள்ளது என தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கலைவையான விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
“ அதிமுக - பாஜக இடையேயான அமைந்துள்ள கூட்டணியானது துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றதுதான். இந்த கூட்டணி, விரும்பி அமைந்தது போல் தெரியவில்லை. அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் பேசியபோது, அவர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என்பதை உணர முடிந்தது” என தெரிவித்துள்ளார்.