For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"முதன்முறையாக ஜம்மு - காஷ்மீர் மக்கள் அச்சமின்றி வாக்களித்துள்ளனர்" | #Narendramodi பெருமிதம்

02:08 PM Sep 19, 2024 IST | Web Editor
 முதன்முறையாக ஜம்மு   காஷ்மீர் மக்கள் அச்சமின்றி வாக்களித்துள்ளனர்     narendramodi பெருமிதம்
Advertisement

முதன்முறையாக ஜம்மு - காஷ்மீர் மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களித்துள்ளனர்" என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisement

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 24 தொகுதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில், 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளில் பிரசாரம் தீவிரம அடைந்துள்ளது. ஸ்ரீநகரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது:

"இன்று நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கிறீர்கள். இளைஞர்களின் இந்த உற்சாகம், பெரியவர்கள், ஏராளமான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பார்வையில் அமைதியின் செய்தி உள்ளது. இது தான் புதிய காஷ்மீர். ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தின் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று 7 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. முதன்முறையாக இந்த வாக்குப்பதிவு பயங்கரவாதத்தின் நிழல் இல்லாமல் நடந்தது.

இவ்வளவு பெரிய அளவில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கிஷ்த்வாரில் 80% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன, தோடா-வில் 71% வாக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் பல தொகுதிகளில் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது, மேலும் வாக்காளர்கள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க எழுச்சியையும் எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படியுங்கள் : “ஒரே நாடு ஒரே தேர்தல் - நடைமுறைக்கு சாத்தியமற்றது” - முதலமைச்சர் #MKStalin!

இன்றைய சூழலில் நமது ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்தியாவின் ஜனநாயகத்தை எப்படி பலப்படுத்துகிறார்கள் என்பதை உலகம் முழுவதும் பார்க்கிறது. சில நாட்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் வந்த போது, ஜம்மு காஷ்மீர் அழிவுக்கு மூன்று குடும்பங்கள் காரணம் என்று கூறியிருந்தேன். யாரேனும் அவர்களை எப்படிக் கேள்வி கேட்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், எப்படியாவது நாற்காலியைப் பிடித்து உங்கள் அனைவரையும் கொள்ளையடிப்பது அவர்களின் பிறப்பு உரிமை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

3 குடும்பங்களால் காஷ்மீர் மக்கள் அழிவதை அனுமதிக்கமாட்டேன். எனவே, இங்கு அமைதியை நிலைநாட்ட முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறேன். தற்போது ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சீராக இயங்குகின்றன. குழந்தைகளின் கைகளில் பேனா, புத்தகங்கள், மடிக்கணினிகள் உள்ளன. பள்ளிகளில் தீ விபத்து பற்றிய செய்திகள் இல்லை, அதற்கு பதிலாக புதிய கல்லூரிகள், பள்ளிகள், எய்ம்ஸ், ஐ.ஐ.டி கட்டப்படுகிறது.

இங்குள்ள 3 குடும்பங்களும் ஜம்மு காஷ்மீர் அரசியலை தங்கள் சொத்தாகக் கருதுகின்றன. தங்கள் குடும்பத்தைத் தவிர, வேறு யாரையும் முன்வர அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவ்வாறான எண்ணம் இல்லையெனில் உள்ளாட்சி தேர்தல்களை ஏன் நிறுத்தினார்கள்? முந்தைய சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது இப்போது காஷ்மீர் எவ்வளவு மாறிவிட்டது. இன்று தேர்தல் பிரச்சாரங்கள் கூட இரவு வரை நடந்து வருகிறது, இன்று மக்கள் ஜனநாயகத்தை கொண்டாடுகிறார்கள். இங்குள்ள இளைஞர்களுக்கு தங்கள் வாக்குகளால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது"

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Tags :
Advertisement