வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு புதிய ஏ.சி வார்டுகள் - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்பாடு!
வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக ஏ.சி வார்டுகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நேற்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் தாக்கத்தினால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கத்திரி வெயிலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு ஏசி வார்டுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருதை பெற்றுக்கொள்ள டெல்லி செல்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வார்டில் வெண்டிலேட்டர் கருவிகளும், ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தனி வார்டுகளில் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு - சர்க்கரை கரைசல் ஆகியவை வழங்கப்படுகிறது. அந்த சிறிப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது நோயாளிகளுக்கிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.