For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடியின் கண்களுக்கு தமிழ்நாடு தான் இந்தியாவாக தெரிகிறது - ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

08:43 AM Mar 24, 2024 IST | Web Editor
பிரதமர் மோடியின் கண்களுக்கு தமிழ்நாடு தான் இந்தியாவாக தெரிகிறது   ஆர் எஸ் பாரதி பேச்சு
Advertisement

“பிரதமர் மோடியின் கண்களுக்கு தமிழ்நாடுதான் இந்தியாவாக  தெரிகிறது” என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Advertisement

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் திமுகவின் சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர்  கலாநிதி வீராசாமி எம்பி அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் பகுதிச் செயலாளர்கள் வாபெ சுரேஷ், செந்தில்குமார் ஏற்பாட்டில் அறிவகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, சென்னை வடக்கு
மாவட்ட பொறுப்பாளர் ஆர்டி சேகர் எம்எல்ஏ, ராயபுரம் ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ
ஆகியோர் கலந்துகொண்டு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி
வீராச்சாமி எம்பியை அறிமுகம் செய்து வைத்தனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் இளைய அருணா காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மையம், ஆம் ஆத்மி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி,

"பிரதமர் மோடி 4ம் தர பேச்சாளரை விட கீழே இறங்கி பேசக்கூடிய நிலைக்கு வந்து விட்டார். பொய்யை தவிர வேறு எதுவும் பேசவில்லை என்று சத்தியம் செய்யும் நிலைக்கு வந்து விட்டார். திமுக இந்துக்களுக்கு விரோதி என்று பேசுவார்கள். உண்மையான இந்துக்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான். தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இந்து கோயில்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி பெற்றது திமுகதான்.

திருச்செந்தூர், திருத்தணி, ராமநாதபுரம், ஸ்ரீரங்கம், நாகூர், வேளாங்கண்ணி சட்டமன்ற
தொகுதியில் திமுக தான் வெற்றி பெற்றது. மதசார்பற்ற முறையில் வெற்றி வெற்றிக்கொடி நாட்டிய ஒரே கட்சி திமுக தான். பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று  சொன்னவரை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைத்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம்.
ராஜ் பவனில் பதவி பிரமாணம் செய்து வைத்த முதலமைச்சர் மே மாதம் ராஷ்டிரபதியில்
இந்திய பிரதமர் பதவி ஏற்கும் விழாவிற்கு செல்வார்.

மோடி நான்கு முறை தமிழ்நாடு வந்துள்ளார். மீண்டும் நான்கு முறை வருவார். மோடிக் கண்ணுக்கு இந்தியாவே தமிழ்நாடு என்று தெரிகிறது. நாம் கொடுத்துள்ள தேர்தல் அறிக்கையை இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர்களும் பாராட்டுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதம் உரிமை தொகை செலுத்துகிறார். வங்கிக்கு செல்லாத பெண்கள் கூட இன்று வங்கிக்கு செல்கிறார்கள். 19ஆம் தேதி தேர்தல் வருவதால் உரிமை தொகையை நிறுத்தக்கூடாது என்பதற்காக 15ஆம் தேதி சிறப்பு  உத்தரவு போட்டுள்ளார்.

வட மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேசத்தில்
ராமர் கோயில் கட்டினாலும் மக்கள் இன்று தெளிவாகி விட்டார்கள். 20 அல்லது 30த் தொகுதி தாண்டாது. பீகாரின் 40 தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெறுவார்கள். குஜராத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஓட்டுக்கள் சேர்ந்தால் ஒரு இடம் கூட கிடைக்காது. மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறையை வைத்து சரத் பவார் குடும்பத்தை பிரித்தார்கள்.
சிவசேனாவை பிரித்து விட்டார்கள். அங்கும் வாக்குகள் வாங்க முடியாது.

தமிழ்நாட்டில் நாற்பதும் நாமதான். கேரளாவில் நமது கூட்டணி. இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. பாஜகவுக்கு 116 முதல் 120 இடங்கள் மேல் கிடைத்தது என கணக்குகள் தெரிவிக்கிறது.  பிரதமர் மோடிக்கு  தோல்வி பயம் வந்துவிட்டது. ஆட்சிக்கு வரப்போவது இந்தியா கூட்டணி என்பது தெரிந்ததால் எதையெதையோ செய்து பார்த்தார்கள். ஆனால் தக்க நேரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு முடிவுகளை வெளியிடுகிறது. இதனால் அவருக்கு பயம்.” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement