Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது” - செல்வப்பெருந்தகை பேச்சு!

09:23 PM Jun 15, 2024 IST | Web Editor
Advertisement

இன்னும் 25 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது என கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழா மேடையில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலின் உண்மை, உழைப்பு, நேர்மை ஆகியவை இந்தியா முழுவதும் இன்று எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் தமிழ்நாட்டில் 40க்கு 40 எப்படி சாத்தியம் என பேசுகிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டார். வாக்குறுதியில் கொடுக்காதவற்றை ஒவ்வொரு மாதமும் அறிவித்து வருகிறார்.

உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு தொழில்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு முன்னேறி வருகிறது. இந்திய கூட்டணியில் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் 25 ஆணடுகளுக்கு யாரும் இந்த கூட்டணியை அசைக்க முடியாது. இது எஃகு கூட்டணி. இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.

Tags :
CMOTamilNaduCoimbatoreCongressDMKINDIA AllianceMK Stalinselvaperunthagai
Advertisement
Next Article