நட்சத்திர ஓட்டல் லிப்டில் சிக்கிய மேற்கு வங்காள கால்பந்து வீராங்கனைகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!
கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனையர், கோயம்பேட்டில் நட்சத்திர ஓட்டல் லிப்டில் சிக்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பத்திரமாக மீட்டனர்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர்
மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கடந்த வாரம் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் விளையாடிய வருகின்றனர்.
இதையும் படியுங்கள்;“ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ஐரோப்பிய நாடுகளில் இருந்து முதலீடு ஈர்க்கப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள நேபாள நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனைகள் 20 க்கும் மேற்பட்டோர் கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஐந்தாவது தளத்தில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக பத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் நட்சத்திர ஓட்டலில் உள்ள லிப்டில் தரை தளத்திற்கு
வந்தபோது திடீரென லிப்ட் பழுதாகி பாதியில் நின்றது.
இதனால், செய்வது அறியாமல் லிப்டில் வந்த வீராங்கனைகள் அலறி அடித்து சத்தம் போட்டனர். உடனடியாக ஓட்டல் ஊழியர்கள் கடப்பாரையை கொண்டு லிப்டின் கதவை உடைத்து வீராங்கனைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அது தோல்வியில் முடிந்ததால் கோயம்பேடு தீயனைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் லிப்டின் கதவை லாவகமாக திறந்து லிப்டில் சிக்கி இருந்த மேற்கு வங்காளம் விளையாட்டு வீராங்கனை பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மேற்கு வங்காளம் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஓட்டல் லிப்ட்டில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.