சேலத்தை தொடர்ந்து கோவை... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்... தொடரும் பரபரப்பு!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திர பதிவுத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் என 4 தளங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் டவுன் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் என 30க்கும் மேற்பட்டோர் நான்கு தளங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : Rain Alert | அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 6 நாட்களுக்கு அடித்து வெளுக்க போகும் மழை!
இந்த சோதனையில் எந்த விதமான வெடிகுண்டும் கண்டறியப்படவில்லை என தெரிகிறது. இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த மிரட்டல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஈமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 3 மணியளவில் மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.