Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
11:00 AM Oct 18, 2025 IST | Web Editor
தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Advertisement

தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி இடங்களில் கல்வி, வேலை ஆகியவற்றுக்கான தங்கியுள்ளவர்கள் தங்கம் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்துள்ளனர். புது ஆடைகள், பட்டாசுகள் வாங்க கடைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்துள்ளனர். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுள்ளது.

Advertisement

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அந்த வகையில், நேற்று கிலோ ரூ.1,500 க்கு விற்பனையான மல்லிகை இன்று ரூ.2,500-க்கும், கனகாம்பரம்  ரூ.2,000 -க்கும், முல்லை மற்றும் காக்ரெட்டான் - ரூ.1,500 -க்கும், பிச்சி பூ 1,200 -க்கும், அரளி ரூ.200-க்கும், மரிக்கொழுந்து ரூ.200க்கும், பன்னீர் ரோஸ் ரூ.200க்கும், பட்டன் ரோஸ் ரூ.200க்கும், செவ்வந்தி ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
DiwaliDiwali FestivalfestivalFlowersFlowers priceflowers rateMadurai
Advertisement
Next Article