For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
09:46 AM Aug 26, 2025 IST | Web Editor
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு
Advertisement

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Advertisement

பொதுவாக மதுரை மல்லிகை பூ கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யபடும் நிலையில் இன்று 4 மடங்கு விலை உயர்ந்து கிலோவுக்கு ரூ. 2,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக 1 கிலோ மதுரை மல்லிகை பூ கிலோ 2500 ரூபாயும், முல்லைப் பூ 1000 ரூபாய்க்கும், செவ்வந்தி, பிச்சி - 1000, கனகாம்பரம் - 1000, அரளி - 600, பட்டன் ரோஸ் - 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பூக்களின் இயல்பான விலை மற்றும் இன்றைய விலை நிலவரம்:

மல்லி ரூ.300 முதல் ரூ.600 - ரூ.2500
முல்லை ரூ.300 - ரூ.1000
அரளி ரூ.300 - ரூ.600
பிச்சி ரூ.250 - ரூ.1000
செவ்வந்தி ரூ.150 - ரூ.250
கனகாம்பரம் ரூ.300 - ரூ.1000
பட்டன் ரோஸ் ரூ.150 - ரூ.300

பூக்களின் விலை உயர்ந்தாலும் பண்டிகை திநதியோடி நேற்று ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வந்து பூக்களை வாங்கிச்சென்றனர்.

Tags :
Advertisement