Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை” - திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்!

05:58 PM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையிலிருந்து 1.45 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேட்டூர் அணை நாளை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு நீர் திறந்து விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்வரத்து விவரத்தினை அவ்வபோது தெரிந்து கொள்ளவும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AlertCauverydistrict CollectorFloodKarnatakaMettur damMonsoonNews7Tamilnews7TamilUpdatesRainTrichy
Advertisement
Next Article