For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

UPI சேவையை அறிமுகப்படுத்திய Flipkart!

01:57 PM Mar 04, 2024 IST | Web Editor
upi சேவையை அறிமுகப்படுத்திய flipkart
Advertisement

பிளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

Advertisement

டிஜிட்டல் துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.  கூகுள் பே,  போன் பே,  பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் அனுப்ப உதவுகின்றன.  அதுபோல சாதாரண டீக்கடையில் தொடங்கி மிகப் பெரிய துணிக்கடைகள்,  நகைக்கடைகள் என அனைத்து இடங்களிலும் ‘க்யூஆர் கோடு’ மூலமாக பணம் அனுப்பும் முறையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில்  யுபிஐ செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இச்சேவையை பயன்படுத்துவது எளிமையாக இருப்பதால் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் யுபிஐ செயலிகளின் ஆதிக்கம் வந்துவிட்டது.  ஏற்கனவே இந்திய சந்தையில் கூகுள் பே,  போன்பே,  பேடிஎம்,  அமேசான் பே ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதற்கு போட்டியாக பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனமும் யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பிளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.  இந்த வசதி பிளிப்கார்ட் யுபிஐ என அழைக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் பிளிப்கார்ட் யுபிஐ செயலியை பயன்படுத்தலாம் என்றும் இது பயன்படுத்துவது மிக எளிதானது என்றும் பிளிப்கார்ட்டின் ஃபின்டெக் மற்றும் பேமெண்ட்ஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் தீரஜ் அனேஜா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement