#Madurai - ல் தரையிறக்க முடியாமல் வானில் வட்டமிட்ட 2 விமானங்கள்! சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் பத்திரமாக தரையிறக்கப்பட்டன!
மதுரையில் கனமழை காரணமாக தரையிரக்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த 2 விமானங்களும் மதுரை விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் 2 நாட்களாக சென்னையை மழை மிரட்டியது. தொடர்ந்து கோவையில் மழை பெய்து வந்தது. தற்போது மதுரை அருகே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இன்று மாலை முதல் மதுரையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. சுமார்1 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் சித்தா மருத்துவம் படித்தோர் சிகிச்சை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
இதனால், மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் இரண்டு விமானங்கள் வட்டமடித்து வந்த நிலையில், சென்னை - மதுரை மற்றும் பெங்களூரு - மதுரை விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதனிடையே, கடந்த அக். 11ம் தேதி திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக வானத்தில் 3 நேரத்திற்கும் மேலாக வட்டமடித்து, எரிபொருள் குறைந்த பிறகு விமானம் தரையிறக்கப்பட்டது குறிப்பிடதக்கது.