Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீனவர்கள் கைது... மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

04:32 PM Nov 12, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அந்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில், நாகையைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர் “இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, மீனவர்கள் குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது” எனக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024ம் ஆண்டில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக் காட்டினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும், உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் வலியுறுத்தி கேட்டுள்ளார்.

Tags :
ArrestCentral governmentfishersJaishankarMK Stalin
Advertisement
Next Article