இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் - 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸில் களமிறங்கிய இந்திய அணி 436 ரன்கள் எடுத்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 316 ரன்கள் எடுத்து 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 420 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியாவின் வெற்றி இலக்கு 231 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்திய சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா 47 ஓவரில் 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியா 202 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.