Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

04:56 PM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு கடந்த 15ம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவத்தில் அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு சிபிஐ விசாரணை குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.  தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த அறிக்கையை  2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், செந்தில் குமார் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர், வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்,  அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்த வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செயல்படுவது சமூகத்துக்கு மோசமானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  தூத்துக்குடியில் அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரியும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Tags :
CBIchennai High Courtgun shotmadras HCMadras High CourtsterliteThoothukudiTN Govt
Advertisement
Next Article