ஏர் இந்தியா AI-315 விமானமத்தில் தீவிபத்து!
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா AI-315 விமானம், தரையிறங்கிய பிறகு விமானத்தின் துணை மின் அலகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இச்சம்வம் குறித்து ஏர் இந்தியா, தனது எக்ஸ் தளத்தில்
ஜூலை 22, 2025 அன்று ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் AI315 விமானம், தரையிறங்கி நிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு (APU) தீப்பிடித்தது. பயணிகள் இறங்கத் தொடங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது., மேலும் துணை மின் அலகு(APU) தானாகவே கணினி வடிவமைப்பின்படி மூடப்பட்டது. விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டன, இருப்பினும், பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இறங்கினர், . மேலும் விசாரணைகளுக்காக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கட்டிடத்தில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து விமான பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தீ விபத்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.