Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது" - ஓபிஎஸ் பேட்டி

08:36 PM Nov 10, 2023 IST | Web Editor
Advertisement

அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறுயதாவது: “கூட்டுறவுத்துறை என்பது மத்திய அரசின் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்குகின்ற ஒரு முக்கியமான துறை ஆகும். கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம், அதை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்: “ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சாதிய கொடுமைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கருத்து. அதே சமயம் நீட் தேர்விற்கும் இதற்கும் முடிச்சு போடுவது சரியல்ல. எனினும் நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாதது என்பதே எப்போதும் எங்களின் கருத்து. அதிமுக கொடியை எங்கள் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் தான் உள்ளது.”

இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags :
ADMKEPSMadrasHighCourtMKstalinGovtNEETOpaneerSelvamOPSPressMeetsymbol
Advertisement
Next Article