For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா - தமிழ்நாடு அரசு தடைவிதிக்க மூட்டா சங்கம் வலியுறுத்தல்!

பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்தக்கூடாது என மூட்டா சங்கம் வலியுறுத்தியுள்ளது.
08:53 AM May 28, 2025 IST | Web Editor
பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்தக்கூடாது என மூட்டா சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா   தமிழ்நாடு அரசு தடைவிதிக்க மூட்டா சங்கம் வலியுறுத்தல்
Advertisement

இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என மதுரை காமராஜர், மனோன்மணீயம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு(மூட்டா) சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் அ.தி.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

“இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப் படுகொலையை இஸ்ரேல் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பது உலகம் அறிந்த உண்மை. பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலின் கொடுஞ்செயல் மனித வரலாறு பார்த்திராத பெருந்துயராகும்.

இத்தகைய செயல்களைக் கண்டித்து, லண்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட போப் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், இஸ்ரேலை இயல்பான ஒரு தேசமாகப் பார்க்க வைக்கும் வகையிலான எந்த முயற்சியையும் நாம் அனுமதிக்கக் கூடாது.

ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இஸ்ரேலுக்கு ஆதரவான முகத்தை உருவாக்கும்விதமாக சிலர் திரைப்பட விழா நடத்த விரும்புகின்றனர். சென்னையில் உள்ள இசைக் கல்லூரியில் இந்த விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாத, குழந்தைகள் மீது சிறிதும் அக்கறை இல்லாதவர்களால் மட்டும்தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய முடியும். எனவே, தமிழக அரசு இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது. இதைத் தடை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement