For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Brother படத்தின் புதிய பாடல் |போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!

07:35 AM Oct 22, 2024 IST | Web Editor
 brother படத்தின் புதிய பாடல்  போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு
Advertisement

ஜெயம் ரவி நடிக்கும் ' பிரதர் ' படத்தின் புதிய பாடல் நாளை மாலை 5மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரதர்'. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன், பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதனிடையே, 'பிரதர்' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்கள் : BRICSSummit - ரஷ்யா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'மெதக்குது காலு ரெண்டும்' என்ற பாடல் நாளை (அக்டோபர் 23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கல்யாண பத்திரிக்கை வடிவில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது.

https://twitter.com/Screensceneoffl/status/1848365432224526639/photo/1
Tags :
Advertisement