வெளியானது 'ஃபைட் கிளப்' திரைப்படத்தின் டீசர்!
07:04 PM Dec 02, 2023 IST | Web Editor
Advertisement 
ஃபைட் கிளப் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
Advertisement 
நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் 'ஃபைட் கிளப்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 'ஃபைட் கிளப்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.